செய்திகள்
புள்ளி எடுக்கும் முனைப்பில் பெங்கால் வாரியர்ஸ் அணி

புரோ கபடி - தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

Published On 2019-08-29 16:40 GMT   |   Update On 2019-08-29 16:40 GMT
டெல்லியில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது பெங்கால் வாரியர்ஸ் அணி.
புதுடெல்லி:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தனர். ஆனால், அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் அபாரமாக விளையாடியது.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 35 - 26 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
Tags:    

Similar News