செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-10-27 11:23 GMT   |   Update On 2021-10-27 11:23 GMT
கோவில் கோபுரங்களில் புதிதாக பல வர்ணம் பூசப்பட்டு புதிதாக மண்டபம் கட்டப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
உடுமலை:

 திருப்பூர் மாவட்டம் உடுமலை பூமாலை வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர், ராமலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையோடு முருகன், கொற்றவை, 9 கோள்கள் ஆகிய சந்நிதிகள்  உள்ளன.

இந்தநிலையில் கோவில் கோபுரங்களில் புதிதாக பல வர்ணம் பூசப்பட்டு புதிதாக மண்டபம் கட்டப்பட்டு திருப்பணிகள்  நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக 3 நாட்கள் திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு, வேள்விநிறைவு , திருப்பள்ளியெழுச்சி, விமான கலசம் நிறுவுதல் , மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது. வருகிற  7-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. 
Tags:    

Similar News