செய்திகள்
யோகாவில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

திருப்பூரில் பெண்களுக்கு பிரத்யேக யோகா பயிற்சி

Published On 2021-09-07 08:15 GMT   |   Update On 2021-09-07 08:15 GMT
புதிய திட்டங்களால் ஏழை,நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைக்காக கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரியில் முதியோர் மறதி நோய்க்கான தனி சிகிச்சை பிரிவு, சிறப்பு குழந்தைகளுக்கான உணர்திறன் சிகிச்சை பூங்கா, படுக்கை வசதியுடன் கூடிய ‘பேட்டரி’ வாகனம், இணைய அடிமையாகும் குழந்தைகளை மீட்க மனநல நிபுணர் குழு அமைக்கப்படும் என்று சட்டமன்ற  மானிய கோரிக்கையின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏழை, நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைக்காக கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம்  இருக்காது. அத்துடன் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மாநகர நகர்நல மையங்களில் பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கென பிரத்யேக யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News