செய்திகள்
சேதமான பயிர்களை விவசாயிகள் வேதனையுடன் காண்பித்த காட்சி.

கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்- விவசாயிகள் கவலை

Published On 2021-01-18 04:08 GMT   |   Update On 2021-01-18 04:08 GMT
கொட்டாம்பட்டி பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் கடலை செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பருவமழை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு மானாவாரியாக நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பருவம் தவறி பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொட்டாம்பட்டி அருகே எஸ். ஆலம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரானது தண்ணீரில் மூழ்கி தற்போது முளைக்க தொடங்கியுள்ளன.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் முளைத்து வீணாகி வருகின்றன. கடந்த சில வருடங்களாக பருவமழை இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தொடர் மழையால் விவசாயிகளுக்கு பெரும்பாதிப்படைந்தது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News