ஆன்மிகம்
பொங்காளியம்மன் கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கோவை குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவில் மாசித் திருவிழா

Published On 2021-03-10 02:05 GMT   |   Update On 2021-03-10 02:05 GMT
கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 16-ந் தேதி அம்மை அழைப்பு, மாலையில் திருக்கல்யாணம் நடக்கிறது.

17-ந் தேதி காலை 9 மணிக்கு குறிச்சி பஸ்நிறுத்தம் கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வ லமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்த டைகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறு கிறது. 18-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 19-ந் தேதி மறுபூஜையுடன் மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News