செய்திகள்
ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - அரைஇறுதியில் ஜோகோவிச்

Published On 2021-09-09 07:16 GMT   |   Update On 2021-09-09 09:03 GMT
பெண்கள் ஒற்றையர் பிரிவில் மரியா ‌ஷகாரி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

நியூயார்க்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) - ஆறாம் நிலை வீரரான பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.இதில் ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 7-6 (7-8), 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹாரீசை தோற்கடித்தார்.

அரைஇறுதியில் ஜோகோவிச் - சுவரேவ் மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 17-வது வரிசையில் உள்ள மரியா ‌ஷகாரி (கிரீஸ்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 4-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


அவர் அரை இறுதியில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை சந்திக்கிறார். ரடுகானு கால் இறுதியில் 6-3, 6-4 என்ற கணக்கில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி கரமாக தோற்கடித்தார்.

Tags:    

Similar News