செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்தது - புதிதாக 75 பேருக்கு நோய் தொற்று

Published On 2020-10-15 02:12 GMT   |   Update On 2020-10-15 02:12 GMT
மதுரையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. இதுபோல், புதிதாக 75 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 55 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 50 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 803 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஏற்கனவே குணம் அடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலான ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் தினந்தோறும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது மூதாட்டி, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 77 வயது மூதாட்டி, 77 வயது முதியவர் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சினை, இருதய பிரச்சினை உள்ளிட்ட கோளாறுகள் இருந்தன. இணை நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தது. கொரோனா பாதிப்பு மட்டும் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிது. கொரோனாவுடன் இணை நோயும் இருந்தால் சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றுவது சற்று கடினமானது என்றனர்.
Tags:    

Similar News