ஆன்மிகம்
துர்க்கை

துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும் வழிபாடு

Published On 2019-07-02 06:55 GMT   |   Update On 2019-07-02 06:55 GMT
துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை.

பராசக்தியான பார்வதியின் ஒரு அம்சமாக தோன்றியவர் தான் துர்கா தேவி. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் அருள்கின்ற தெய்வம் துர்கா தேவி. அதிலும் குறிப்பாக எதிர்ப்புகளை சமாளிக்கும் வெற்றி பெறும் ஆற்றலை வழங்குகிறார். புராண காலத்தில் அயோத்தி சக்கரவர்த்தியான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி துர்கா தேவியை வழிபட்ட பிறகே, இலங்கை வேந்தன் ராவணனை வெற்றி கொள்ளும் சக்தியை பெற்றதாக கூறப்படுகிறது.

வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவர்கள், நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளால் அவதிப்படுபவர்கள் வாழ்நாள் முழுவதும் துர்க்கை தேவியை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

Tags:    

Similar News