உள்ளூர் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 336-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலையில் ரூ.40 குறைந்தது.
சென்னையில் இன்று காலை ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 296-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 537-க்கும் விற்றது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.65 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50க்கு விற்றது.