செய்திகள்
டிகே சிவக்குமார்

கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க குழு: டி.கே.சிவக்குமார்

Published On 2021-06-25 03:39 GMT   |   Update On 2021-06-25 07:48 GMT
மக்களின் உரிமைகள், இறையாண்மை, அவர்களின் குடியுரிமையை காக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் முதல்-மந்திரியான வரலாறு உண்டு. வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது இல்லை. அதாவது தேவராஜ் அர்ஸ், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்தும் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தனர். வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் அவர்களின் உட்கட்சி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளட்டும். அவர் எங்கள் கட்சி விவகாரங்கள் குறித்து பேச வேண்டியது இல்லை.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேட்கப்படுகிறது. மக்களின் உரிமைகள், இறையாண்மை, அவர்களின் குடியுரிமையை காக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம். அந்த பணியை நாங்கள் செய்வோம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் விவரங்களை சேகரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்காக குழுக்களை அமைத்துள்ளோம்.

Tags:    

Similar News