உள்ளூர் செய்திகள்
தென்காசியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் தீட்டிய போலீசார்

தென்காசியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் தீட்டிய போலீசார்

Published On 2022-01-18 06:38 GMT   |   Update On 2022-01-18 06:38 GMT
தென்காசி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே இருந்த வேகத்தடைகளில் தீட்டப்பட்டிருக்கும் வெள்ளை கோடுகள் சரிவர தெரியாத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் போலீசார் அதற்கு வர்ணம் தீட்டினர்
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது சற்று பெரிய அளவிலான வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

இது வாகனத்தில் மெதுவாக செல்பவர்களுக்கு முந்தைய வேகத்தடையை ஒப்பிடும்போது மென்மையாகவும் வேகமாக செல்பவர்களுக்கு மிகவும் ஆபத்தாகவும் அமையும். 

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே இருந்த வேகத்தடை தெரிவதற்கான அதன் மேல் தீட்டப்பட்டிருக்கும் வெள்ளை கோடுகள் சரிவரத் தெரியாத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் முழு ஊரடங்கான கடந்த 16-ந் தேதி தென்காசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் வேகத்தடைக்கு மேல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கோடுகள் தீட்டினர். 

போக்குவரத்து காவல் துறையினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News