செய்திகள்

வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு

Published On 2018-05-04 06:25 GMT   |   Update On 2018-05-04 06:25 GMT
வடகொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படையை குறைத்துக் கொள்ளுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். #trumporder #reducesoldiers
வாஷிங்டன்:

வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து முக்கிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், படை குறைப்பு குறித்து பரிசீலிக்கும்படி பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் படை குறைக்கப்படுவதற்கும், அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சந்திப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

தற்போது வடகொரியாவில் அமெரிக்கப் படையினர் 23,500 பேர் இருப்பதாகவும், வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான அமைதி ஒப்பந்தம் மூலம் இவ்வளவு அதிக படை தேவையற்றது எனவும் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் தென்கொரியாவில் உள்ள அனைத்து அமெரிக்கப் படையினரையும் திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்து வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தயக்கம் தெரிவிப்பதாகவும், அதுகுறித்து தற்போது முடிவெடுக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumporder #reducesoldiers
Tags:    

Similar News