செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்: கெஜ்ரிவால் அறிவுறுத்தல்

Published On 2021-04-12 01:37 GMT   |   Update On 2021-04-12 01:37 GMT
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்பத்திரிகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி :

கொரோனாவின் முதல் அலையில் சிக்கி மீண்ட டெல்லி, இப்போது இரண்டாவது அலையிலும் மாட்டிக்கொண்டுள்ளது. இதையொட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அவசரம் என இல்லாதவரையில் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள், முக கவசத்தையும், கிருமிநாசினியையும் பயன்படுத்துங்கள். தனி மனித இடைவெளியை பின்பற்றுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.



மேலும், கொரோனா நிலைமையை கையாள்வதற்கு ஊரடங்கு பொதுமுடக்கம் ஒரு தீர்வு ஆகாது என சுட்டிக்காட்டி உள்ள அவர், “வைரஸ் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்பத்திரிகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்பத்திரி படுக்கைகளை மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்காக விட்டு வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
Tags:    

Similar News