உள்ளூர் செய்திகள்
பழுதடைந்த இணைப்பு சாலை.

பழுதான இணைப்பு சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-05-05 07:56 GMT   |   Update On 2022-05-05 07:56 GMT
திருவையாறு அருகே திங்களூரில் பழுதான கிராம இணைப்பு சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் புகழ்மிகுந்த ஆன்மீகச் சுற்றுலாத் தலமான திங்களூர் கிராமம் உள்ளது. காவிரி ஆறு மற்றும் குடந்தை சாலையில் வடபகுதியில் பிரிந்து செல்லும் உட்கிராமமான திங்களூரிலிருந்து அருகாமையில் உள்ள பெரமூர் மற்றும் அணைக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு விவசாய வேலையின் பொருட்டும் நெல் அறைவை மற்றும் சொந்த அலுவல்களை முன்னிட்டும், நடந்தும், மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களிலும் குடந்தை சாலையை சுற்றிக்கொண்டு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று வர வேண்டியிருந்தது.

தூரத்தையும் நேரத்தையும் குறைத்து விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பயணத்தை எளிதாக்கும் வகையில் வயல்களுக்கு அப்பாலும் அருகாமையிலும் உள்ள திங்களூர் மற்றும் பெரமூர் கிராமங்களுக்கிடையே இணைப்பு சாலை உருவாக்க திட்டமிடப்பட்டு, 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் திங்களூர் பொய்க்கான் தெரு கிழக்கு எல்லை–யிலிருந்து தொடங்கி பெரமூர் கிராமத்தின் திரவு–பதையம்மன் கோயில் தெரு மேற்கு எல்லை வரையிலும் இரண்டு கிராமங்களையும் இணைக்கும் வகையில் திருப்பழனம் ஊராட்சியின் சார்பில் வயல்களுக்கிடையே 5மீட்டர் அகலமும் 2 கிலோமீட்டர் தூரமும் கொண்ட மண்சாலை உருவாக்கப்பட்டு, கப்பிச் சாலையாக போடப்பட்டது.

தற்போது இந்த இரண்டு கிராமங்களினின் இடையேயான இணைப்பு–ச்சாலையில் இருபுறமும் மண் கீழே அமிழ்ந்தும் கப்பிகள் ஆங்காங்கே துருத்தியும், நடுவில் மேடுயர்ந்து புல்பூண்டுகள் மண்டியும் பாதை சிதைந்து பாழடைந்து கிடக்கிறது.நீண்ட நெடுங்கா–லமாகவே சம்பந்தப்பட்ட துறையினரால் கண்டு கொள்ளப்படாமலேயே கைவி–டப்பட்ட இந்த கிராம இணைப்புச் சாலையை, தரமான தார்சாலையாக அமைத்தால் திங்களூர் மற்றும் பெரமூர் ஆகிய இரண்டு கிராமங்களின் வழியாக பஸ் போக்குவரத்து உருவாகவும் வாய்ப்புள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட கிராமச்சாலைத் துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உதவுமாறு கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
Tags:    

Similar News