தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் சாதனங்கள்

ஐபோன், ஐபேட்... இனி எதையும் சொந்தமாக வாங்க வேண்டாம்: ஆப்பிள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Published On 2022-03-25 05:35 GMT   |   Update On 2022-03-25 05:35 GMT
இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஹார்ட்வேர் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை தொடங்கவுள்ளது. 

இதன்மூலம் ஐபோன், ஐபேட், இயர்பட்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த விரும்புபவர்கள் அதனை சொந்தமாக விலைக்கு வாங்காமல், மாதம் சில தொகை என சந்தா கட்டி பயன்படுத்திகொள்ள முடியும். சந்தா முடிந்தவுடன் சாதனங்களை திருப்பி தர வேண்டும்.

இந்த திட்டம் தற்போது தயாரிப்பு நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வசதியில்லாதவர்கள் கூட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் அப்கிரேட் திட்டம் என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டி பழைய ஐபோனை புதிய ஐபோனாக அப்கிரேட் செய்துகொள்ள முடியும். இந்த திட்டம் போல ஹார்ட்வேர் திட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News