செய்திகள்
கோப்புபடம்

குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும் - உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2021-10-18 06:55 GMT   |   Update On 2021-10-18 06:55 GMT
பாரம்பரிய உணவுகளான கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
திருப்பூர்:

உலக உணவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2 சார்பாக ‘உணவின் முக்கியத்துவம்‘ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இணையவழி கருத்தரங்கு நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பங்கேற்று பாரம்பரிய உணவு முறை பற்றியும் உணவு பழக்க வழக்கங்களை பற்றியும் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், நம் பாரம்பரிய உணவுகளான கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். அவற்றை உண்பதால் நாம் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். சிறுவயதில் உடல் பருமன் உருவாக காரணம் நம் உணவு பழக்கவழக்கம் தான். 

உணவு பழக்கம் நன்றாக இருந்தால் உடலில் எதிர்ப்பு சக்திகள் உருவாகும். அதனால் நோய் இல்லா வாழ்க்கையை வாழமுடியும். பெற்றோர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பாரம்பரிய உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரை, மருந்துகளை தேடி அலையாமல் நல்வாழ்க்கை வாழ முடியும் என்றார்.
Tags:    

Similar News