ஆட்டோமொபைல்

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவக்கம்

Published On 2017-11-21 11:09 GMT   |   Update On 2017-11-21 11:09 GMT
மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இந்தியாவின் முதல் சார்ஜிங் மையம் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்பரேஷன் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்யும் முதல் மையத்தை இந்தியாவில் துவங்கியுள்ளது. மும்பையின் நாக்பூர் நகரில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் துவங்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் மையம் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலாவுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.

மின்சார பொது போக்குவரத்து வழிமுறையை இந்தியாவில் துவங்கிய முதல் நகரமாகவும் நாக்பூர் இருப்பதோடு, மின்சார வாகங்களை சார்ஜிங் மையம் பெறும் முதல் நகரமாகவும் இது இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

டெல்லி முழுக்க 55 இடங்களில் 135 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை துவங்கப்பட இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மின்சார வாகன சார்ஜிங் மையத்திற்கான தளத்தை அதிகப்படுத்த முடியும்.



இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் மின்சார கார்களையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாக்பூரை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு வாக்கில் சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய சந்தையாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பயணிகள் வாகனங்களில் இந்திய பங்கு 2010-11-ம் ஆண்டில் 4 சதவிகிதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் 8 சதவிகிதமாக உயரும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News