செய்திகள்
கம்யூனிஸ்டு

தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-17 12:13 GMT   |   Update On 2019-10-17 12:13 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினர்.

இதில் ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீடு திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரெயில்வே, ஏர் இந்தியா உள்ளிட்டவை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தேசிய வேலை உத்திரவாதம் சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியில் இருந்து மீள ஒருமுறை கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News