செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்

நியூசிலாந்து தொடரை ரத்து செய்தது போதாதா... இதுவேறா... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பகீர் 'உணவு பில்'

Published On 2021-09-23 10:13 GMT   |   Update On 2021-09-23 10:13 GMT
நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அந்த அணியினருக்கு பாதுகாப்புத் தருவதற்காக 1 சிறப்பு அதிகாரி மற்றும் 500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இன்னொரு நெருக்கடி வந்துள்ளது. நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அந்த அணியினருக்கு பாதுகாப்புத் தருவதற்காக 1 சிறப்பு அதிகாரி மற்றும் 500 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

அவர்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக இரண்டு வேளைகளும் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல். இதற்கு ஆகிய செலவு மட்டும் 27 லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

நியூசிலாந்து தொடர் ரத்தானதால் ஏற்கெனவே நிதிச் சுமையால் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இது மேலும் சுமையாக மாறியுள்ளது.
Tags:    

Similar News