செய்திகள்
கோப்புபடம்

3 மாதத்தில் ரூ.25ஆயிரம் கோடிக்கு ஆடை ஏற்றுமதி- உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-07-17 11:29 GMT   |   Update On 2021-07-17 11:29 GMT
தற்போது கொரோனா பாதிப்புகளில் இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை, படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனாவால் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்படைந்ததால், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.10 ஆயிரத்து 955ஆக வீழ்ச்சியை சந்தித்தது.

தற்போது கொரோனா பாதிப்புகளில் இருந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை, படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது. இதன் மூலம் இந்த நிதியாண்டு (2021-22) தொடக்கம் முதலே சிறந்த முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இந்த நிதியாண்டின் முதல் மாதமாகிய கடந்த ஏப்ரல் மாதம் ரூ.9,661.36 கோடிக்கும்,  மே மாதம் ரூ.8,108.48 கோடிக்கும்,ஜூன் மாதம் ரூ.7 ஆயிரத்து 367 கோடிக்கும் வர்த்தகம் நடந்துள்ளது.

முதல் காலாண்டு ஏற்றுமதி வர்த்தகம் ரூ.25 ஆயிரத்து 137 கோடியை எட்டிப்பிடித்துள்ளது என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரி வித்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும் வர்த்தக இலக்கை எட்டியுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்(ஏ.இ.பி.சி.,) செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.

இதில் மத்திய ஜவுளித்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், செயற்கை இழையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை வெளியிட்டார். இதில் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசுகையில், செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு ஊக்கச்சலுகை அறிவித்து, கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். 

வாய்ப்புகளை பயன்படுத்தி செயற்கை இழை ஆடை ஏற்றுமதியை மேம்படுத்துவது குறித்து ஏ.இ.பி.சி., சார்பில் தொழில்முனைவோர் மத்தியில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News