ஆட்டோமொபைல்

சாகசப் பயணத்துக்கேற்ற எம்.வி. அகுஸ்டா ‘டுரிஸ்மோ வெலோஸ்’

Published On 2019-03-20 10:45 GMT   |   Update On 2019-03-20 10:45 GMT
எம்.வி. அகுஸ்டா நிறுவனம் விரைவில் டுரிஸ்மோ வெலோஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #MVAgusta



அதிகவேகம் கொண்ட சாகசப் பயணத்துக்கான மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் இத்தாலியைச் சேர்ந்த எம்.வி. அகுஸ்டா நிறுவனம் இந்தியாவில் மோட்டோராயல் என்ற இந்திய பங்குதாரருடன் இணைந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்கிறது. 

மோட்டோராயல் நிறுவனம் கைனடிக் குழுமத்தின் ஓர் அங்கமாகும். இந்நிறுவனம் தற்போது ‘டுரிஸ்மோ வெலோஸ்’ ரக மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் நான்கு மாடல்கள் அறிமுகமாகின்றன.

இந்த மோட்டார்சைக்கிள் 798 சி.சி. திறன் கொண்டதாகும். 3 சிலிண்டர் என்ஜினுடன் 110 ஹெச்.பி. வேகத்தை 10, 150 ஆர்.பி.எம். வேகத்திலும், 80 என்.எம். டார்க் செயல்திறனை 7,100 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இந்த என்ஜினுடன் 6 கியர்கள் உள்ளன.



டுரிஸ்மோ வெலோஸ் ஸ்டாண்டர்டு (ரூ.13.58 லட்சம்), டுரிஸ்மோ வெலோஸ் லுஸோ (ரூ.15.74 லட்சம்), டுரிஸ்மோ வெலோஸ் லுஸோ எஸ்.சி.எஸ். (ரூ.17.17 லட்சம்), டுரிஸ்மோ வெலோஸ் ஆர்.சி.எஸ்.சி.எஸ். (ரூ.19.33 லட்சம்) என நான்கு மாடல்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் மரோஸி யு.எஸ்.டி. போர்க், சாக்ஸ் மோனோ ஷாக் ஆகியன உள்ளன.

இதுதவிர சாகச பயணம் மேற்கொள்வோரின் உடைமைகளை வைப்பதற்கான லக்கேஜ் பானியர்ஸ் இதில் உள்ளன. இதில் ஸ்மார்ட் கிளட்ச் சிஸ்டம் உள்ளது. இவை அனைத்துமே சாகசப் பயண பிரியர்கள் விரும்பும் அம்சங்களாகும்.
Tags:    

Similar News