ஆன்மிகம்
கொட்டாரம் கோவிலுக்கு வெளியே சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்

கொட்டாரம் கோவிலுக்கு வெளியே சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்

Published On 2021-04-29 07:07 GMT   |   Update On 2021-04-29 07:07 GMT
பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி வலம் வரச் செய்து வாசலுக்கு வெளியே கொண்டு வைத்தனர்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ராமநாதபுரத்தில் கற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. விழாவையொட்டி வழக்கம் போல் பல்வேறு பூஜைகள், அபிஷேகம் நடந்தன.

தொடர்ந்து காலை 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சி கொடை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் பக்தர்களுக்கு பார்சலாக வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி வலம் வரச் செய்து வாசலுக்கு வெளியே கொண்டு வைத்தனர்.

அதைதொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அதன் பிறகு இரவு 9 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் ராமநாதபுரம் கற்பக விநாயகர் தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News