செய்திகள்

சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமா? மத்திய மந்திரி பதில்

Published On 2019-02-06 19:48 GMT   |   Update On 2019-02-06 19:48 GMT
சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். #JitendraSingh #CBI
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அப்போதைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் வெடித்தது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சி.பி.ஐ. அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.  #JitendraSingh #CBI 
Tags:    

Similar News