செய்திகள்
கோப்புப்படம்

‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு

Published On 2020-12-17 18:24 GMT   |   Update On 2020-12-17 18:24 GMT
அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திருமானூர் வட்டாரம் வெற்றியூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை பார்வையிட்ட அவர், விரைவில் கணக்கெடுப்பு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அரியலூர் வட்டாரத்தில் இடையத்தாங்குடி கிராமத்தில் பருத்தி பயிர்களையும், பொய்யூர் கிராமத்தில் கடலை வயலையும் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களிடம், இன்றைக்குள் (வியாழக்கிழமை) இறுதி அறிக்கை அனுப்பிட அவர் அறிவுரை வழங்கினார். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டின் அவசியம் மற்றும் பயன் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் ‘புரெவி’ புயல் பயிர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம் வேளாண்மை இயக்குனர் தலைமையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
Tags:    

Similar News