செய்திகள்

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய 2 இந்தியர்கள் பலி

Published On 2019-05-16 19:57 GMT   |   Update On 2019-05-16 19:57 GMT
நேபாள நாட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய இந்தியர்கள் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் ஆகியோர் உடல்நலம் பாதிப்பால் இறந்தனர்.
காத்மாண்டு:

உலகின் 3-வது மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமையை கொண்டது நேபாள நாட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா. 8 ஆயிரத்து 586 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஏறி வருகின்றனர்.

அந்தவகையில் 4 இந்தியர்கள், ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் கொண்ட குழு கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறியது. கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் பிப்லாப் பால்தியா (வயது 48) சிகரத்தை தொட்டார். மற்றவர்கள் பாதி வழியிலேயே நின்று விட்டனர்.

பின்னர் அனைவரும் கீழே இறங்கி வரும் போது அதில் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் (46) ஆகியோர் உடல்நலம் பாதிப்பால் இறந்தனர். மற்ற 3 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் முகாமுக்கு திரும்பினர்.

இதனிடையே மற்றொரு குழுவில் இருந்த சிலி நாட்டை சேர்ந்தவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய போது மாயமானார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News