இந்தியா
பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் ரூ.9,802 கோடியில் சரயு கால்வாய் தேசிய திட்டம் - பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Published On 2021-12-09 08:28 GMT   |   Update On 2021-12-09 11:50 GMT
சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ரூ.9,802 கோடி மதிப்பில் சரயு கால்வாய் தேசிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். 14.04 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும். மேலும் இத்திட்டத்தால் வெள்ள பாதிப்புகளும் குறையும்.

சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் கீழ் காக்ரா, சரயு, ரப்தி, பன்கங்கா, ரோஹின் ஆகிய 5 நதிகள் இணைக்கப்படுகிறது. 600 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த கால்வாய் 318 கிலோ மீட்டர் நீளமுள்ள முதன்மை கால்வாயுடன் இணையும்.

இதையும் படியுங்கள்...விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம் - 48 மணி நேர கெடுவுக்கு பிறகு கிரிக்கெட் வாரியம் அதிரடி

Tags:    

Similar News