செய்திகள்
நியூசிலாந்து அணி

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து நியூசிலாந்து சாதனை

Published On 2020-12-30 10:37 GMT   |   Update On 2020-12-30 10:37 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்த வருடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஐந்திலும் வெற்றி பெற்றது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஆஸ்திரேலியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் தசம புள்ளி அளவிலேயே இடைவெளி இருந்தது.

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இதனால் நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
Tags:    

Similar News