ஆன்மிகம்
முத்தாரம்மன்

உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-09-11 08:19 GMT   |   Update On 2021-09-11 08:19 GMT
உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 6-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் நேமிசங்கள் செலுத்துதல், வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 6-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், 7-ந்தேதி நண்பகல் ஒரு மணி, நடு இரவு ஒரு மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், பக்தர்கள் நேமிசங்கள் செலுத்துதல், வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

8-ம்தேதி நண்பகல் ஒரு மணிக்கு கும்பம் திருவீதி வருதல், மாலை 3 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு அம்மன் சப்பர பவனி ஆகியன நடந்தது.

நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை நடந்தது.

Tags:    

Similar News