இந்தியா
பசவராஜ் பொம்மை

மேகதாது விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை செல்ல தடை- கர்நாடக அரசு

Published On 2022-01-13 02:25 GMT   |   Update On 2022-01-13 02:25 GMT
கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்ட வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி, மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரையை கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

இதையடுத்து கொரோனா பரவலுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை செல்ல ஏன் அனுமதித்தீர்கள் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 



இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:-

 நிலம் மற்றிம் நீர் தொடர்பாக மாநிலத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவோம். கர்நாடக அரசு நிச்சயம் மேகதாது திட்டத்தை செயல்படுத்தும். ஆனால் இப்போது கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் காங்கிரஸ் கட்சி  பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News