செய்திகள்
கோப்புபடம்

பெண்களுக்கு எதிரான குற்ற சட்டங்கள் குறித்து மாணவிகள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்

Published On 2021-10-09 06:51 GMT   |   Update On 2021-10-09 06:51 GMT
பாலியல் ரீதியான துன்புறுத்தல், குடும்பம், பணிபுரியும் இடம் என பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவற்றுக்கு உரிய சட்டரீதியான நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியும்.
திருப்பூர்:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாஜிஸ்திரேட் உதயசூரியா தலைமை தாங்கி பேசியதாவது:

மகளிர் பாதுகாப்பு குறித்து சட்டம் தனிக்கவனம் செலுத்துகிறது. பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. மாணவிகள் இது குறித்து உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல், குடும்பம், பணிபுரியும் இடம் என பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவற்றுக்கு உரிய சட்டரீதியான நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியும்.

இது போன்ற பிரச்சினைகள் உங்கள் கவனத்துக்கு வரும் போது நீங்கள் தைரியமாக இது குறித்து புகார் அளிக்கலாம். நீதித்துறையை நேரடியாக அணுகி தீர்வு காணலாம். இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News