ஆன்மிகம்
கருடாழ்வார்

இன்று கருட பஞ்சமி- விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-08-13 01:36 GMT   |   Update On 2021-08-13 01:36 GMT
கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.

கருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.

கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.

Tags:    

Similar News