செய்திகள்
சதமடித்த மகிழ்ச்சியில் ரோகித் சர்மா

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை

Published On 2019-10-05 11:52 GMT   |   Update On 2019-10-05 11:52 GMT
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
விசாகப்பட்டினம்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 176 ரன்னும், மயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்து அசத்தினர்.
 
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்காடீன் எல்கர், டி காக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். அகர்வால் விரைவில் வெளியேறினார்.

அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதமடித்து சாதனை செய்துள்ள ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News