செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் விதை பரிசோதனை நிலையம் அமைக்க ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு

Published On 2021-09-09 07:12 GMT   |   Update On 2021-09-09 07:12 GMT
டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான 70 சதவீத விதைநெல் தாராபுரத்தில்தான் தயார் செய்யப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் விதை பரிசோதனை நிலையம் இல்லாததால் பயிர் சாகுபடிக்கான விதை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் திருப்பூரில் புதிய விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி மாவட்டத்தில் புதிய விதை பரிசோதனை நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு ஆண்டில் புதிய விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு பணிகளை தொடங்க வசதியாக, ரூ.23.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் இந்த பணி நிறைவும் என்றனர். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான 70 சதவீத விதை நெல் திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் தான் தயார் செய்யப்படுகிறது.

தரமான விதை நெல் என்பதால் விவசாயிகள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைப்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News