செய்திகள்
கோப்புப்படம்

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்

Published On 2021-05-17 13:25 GMT   |   Update On 2021-05-17 13:25 GMT
செயிண்ட் கோபெய்ன், ஹூண்டாய், டிவிஎஸ்,எல்&டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்க்ள அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்குதலுக்கு இந்தியா உள்ளாகியுள்ளது. இந்த 2-வது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இல்லை.

இதனால் தற்போதைய அவசர காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அரசுகள் ஆக்சிஜனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது.

முதல் அலையின்போது நாட்டின் எல்லா மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. இதற்காக சுமார் 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. என்றாலும் முழுமையாக இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.



தற்போது ஆக்சிஜன் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா 2-வது அலை காண்பித்து விட்டது. இதனால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒமந்தூரார், ஸ்டான்லி மற்றும் செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 13 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க செயிண்ட் கோபெய்ன், ஹூண்டாய், டிவிஎஸ்,எல்&டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
Tags:    

Similar News