தொழில்நுட்பம்
சாம்சங்

இணையத்தில் வெளியான சாம்சங் 200 எம்பி கேமரா சென்சார் விவரங்கள்

Published On 2021-02-04 04:13 GMT   |   Update On 2021-02-04 04:13 GMT
சாம்சங் நிறுவனம் 200 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் 200 எம்பி ISOCELL கேமரா சென்சார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய 200 எம்பி கேமரா சென்சார் முதலில் சாம்சங் அல்லாத நிறுவன ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த கேமரா இசட்டிஇ ஆக்சன் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய 200 எம்பி கேமரா 16K தர வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது புகைப்படங்களின் தரத்தை மேம்பட்ட 16 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் என்றும் வீடியோக்களுக்கு 4 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் திறன் கொண்டிருக்கும்.



முன்னதாக சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் 1080 5 நானோமீட்டர் மொபைல் பிராசஸரை 5ஜி வசதி மற்றும் 200 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை இயக்கும் திறனுடன் அறிமுகம் செய்து இருந்தது. தற்சமயம் வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 200 எம்பி சாம்சங் சென்சார் S5KGND எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய சென்சார் அளவில் 1/1.37- இன்ச் அளவில் 1.28 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கிறது. முன்னதாக இசட்டிஇ தலைவர் நி பெய் வெளியிட்ட தகவல்களில், புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைப்பதில் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தார்.
Tags:    

Similar News