செய்திகள்
பிரியங்கா காந்தி

நாட்டின் சொத்துகளை தனது நண்பர்களுக்கு வாரி வழங்குகிறது: மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்

Published On 2021-08-25 04:05 GMT   |   Update On 2021-08-25 04:05 GMT
சுயசார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு, ஒட்டு மொத்த அரசையும் தங்கள் கோடீசுவர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாகவும் பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து உள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசு அனைத்து பணிகளையும் தனது கோடீசுவர நண்பர்களுக்காக செய்து வருகிறது, தற்போது அனைத்து சொத்துகளும் அவர்களுக்குத்தான்’ என சாடியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உருவாக்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அரசின் மூலம் தங்கள் கோடீசுவர நண்பர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வருகிறது என அவர் வேதனையும் தெரிவித்து உள்ளார்.

சுயசார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு, ஒட்டு மொத்த அரசையும் தங்கள் கோடீசுவர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாகவும் பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News