செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மந்திரி சத்ரஜ் சிங் காங்கிரசில் இணைந்தார்

Published On 2018-11-08 13:00 GMT   |   Update On 2018-11-08 13:00 GMT
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். #SatrajSingh #Hoshangabad #Congress
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் ஹொஷங்காபாத் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்ரஜ் சிங். முதல் மந்திரி சிவராஜ் சிங் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பாஜக சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டது.  அதன்படி, ம.பி.யில் இருந்து மந்திரி பதவியில் இருந்து விலக்கப்பட்டவர் சத்ரஜ் சிங்.



இந்நிலையில், பாஜகவின் முன்னாள் மந்திரியான சத்ரஜ் சிங் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹொஷங்காபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபடுவேன் என தெரிவித்தார்.
#SatrajSingh #Hoshangabad #Congress 
Tags:    

Similar News