இந்தியா
வெங்கய்ய நாயுடு

தொடர் அமளியால் மாநிலங்களவை 20-ம் தேதி வரை ஒத்திவைப்பு

Published On 2021-12-17 08:39 GMT   |   Update On 2021-12-17 11:37 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் வரும் திங்கட்கிழமை வரை அவையை ஒத்திவைத்து வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பல்வேறு விவகாரங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், விவாதங்கள் நடைபெறாமல் அடிக்கடி சபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் மாநிலங்களவையில் கூட்டம் தொடங்கியது. இதில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "மாநிலங்களவை வழக்கம்போல் செயல்பட தயவு செய்து ஒருமித்த கருத்துக்கு வரவும். இரு தரப்பினரும் நேருக்கு நேர் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அதற்கு உதவும் வகையில் திங்கட்கிழமை கூடுவதற்கு அவையை ஒத்திவைக்கிறேன் " என்றார்.

இதையும் படியுங்கள்.. தடுப்பூசி போடாத முதியவர்கள் உடனடியாக போட வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
Tags:    

Similar News