செய்திகள்
கேரளாவில் இருந்து கோழி இறைச்சி ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

கேரள மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன

Published On 2021-01-11 12:20 GMT   |   Update On 2021-01-11 12:20 GMT
செங்கோட்டை அருகே கேரள மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன.
செங்கோட்டை:

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரள மாநில எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார், சுகாதார துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் போன்றவற்றை தமிழகத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த லாரியை புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் பிளாஸ்டிக் பைகளில் 30 கிலோ கோழி இறைச்சிைய பொட்டலங்களாக வைத்து மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரி டிரைவரை எச்சரித்த போலீசார், லாரியை இறைச்சியுடன் மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று கேரள மாநிலத்தில் இருந்து 2 லாரிகளில் ஏற்றி வந்த மீன் கழிவுகளையும் புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் மடக்கினர். பின்னர் அந்த லாரி டிரைவர்களை எச்சரித்து, மீன் கழிவுகளுடன் லாரிகளை மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News