செய்திகள்
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருவதை காணலாம்

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2021-05-14 10:40 GMT   |   Update On 2021-05-14 10:40 GMT
பர்கூர் பொறியியல் கல்லூரி, ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை மையம் ஆகியவை தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி:

கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பர்கூர் பொறியியல் கல்லூரி, ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை மையம் ஆகியவை தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கூடுதலாக கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கட்டில், மெத்தைகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News