உலகம்
இத்தாலியில் விதிகளை மீறுவோறுக்கு அபராதம்

ஒமைக்ரான் எதிரொலி: இத்தாலியில் விதிகளை மீறுவோறுக்கு அபராதம்

Published On 2021-12-07 02:11 GMT   |   Update On 2021-12-07 02:18 GMT
பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இத்தாலி :

ஐரோப்பிய நாடான இத்தாலியில், ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இனி திரையரங்கு, விளையாட்டு நிகழ்வுகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அந்த வகையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு 400 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் இத்தாலியில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இத்தாலி மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News