செய்திகள்
அமரிந்தர் சிங், ஹரிஷ் ராவத்

அமரிந்தர் சிங் பா.ஜனதா செல்ல விரும்பினால் போகலாம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத்

Published On 2021-10-20 11:44 GMT   |   Update On 2021-10-20 11:44 GMT
அமரிந்தர் சிங் தனிக்கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா உடன் இடங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கினார். இவருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமரிந்தர் சிங், பா.ஜனதாவில் இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார். இந்த நிலையில் அவரது ஆலோசகர் ரவீன் துக்ரல் புதுக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் கூறுகையில் ‘‘அமரிந்தர் சிங் காகம் சாப்பிட விரும்பினால், பா.ஜனதாவிற்கு செல்ல விரும்பினால் போகலாம். மதசார்பற்ற பழைய உடன்பாட்டில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்றால், அவரை யார் தடுக்க முடியும்?. காங்கிரஸ் உடன் தொடர்புடைய பாரம்பரியமாக கருதப்பட்டார். அவர் பா.ஜனதாவுக்கு செல்ல விரும்பினால் செல்லலாம்.

எல்லையில் 10 மாதங்களாக காக்க வைத்த பா.ஜனதாவை யார் மன்னிப்பது? பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் கையாளப்பட்ட விதத்தில் அவர்களை மன்னிக்க முடியுமா? அவரது அறிக்கை உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. அவருக்குள் இருக்கும் 'மதச்சார்பற்ற அமரீந்தரை' அவர் கொன்றதாகத் தெரிகிறது. காங்கிரஸ் எந்த இழப்பையும் சந்திக்காது, இது உண்மையில் நம்  வாக்குகளை பிரிக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News