செய்திகள்
கொலை செய்யப்பட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறிய காட்சி

ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்

Published On 2021-02-07 11:56 GMT   |   Update On 2021-02-07 11:56 GMT
ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி:

ஏரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பாலு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோடு ஆட்டோ ஏற்றி படுெகாலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலில் உள்ள பாலு வீட்டிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் சென்றார். பாலுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், யூனியன் துணை தலைவர் லட்சுமணப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றனர்.

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்கள்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ்பாண்டியன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ்சென்ன கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டன்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. இதற்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து நன்றி கூறி இனிப்பு வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து பயணிகள் விடுதி முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News