செய்திகள்
வசந்தகுமார் எம்.பி.

குமரியில் 16-ந்தேதி திட்டமிட்டபடி மறியல்: வசந்தகுமார் எம்.பி. தகவல்

Published On 2019-11-12 16:19 GMT   |   Update On 2019-11-12 16:19 GMT
குமரியில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்கக் கோரி வருகிற 16-ந்தேதி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விபத்துக்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வருகிற 16-ந்தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், வில்லுக்குறி, அழகியமண்டபம், களியக்கா விளை 5 இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி, கோட்ட பொறியாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் நாகர்கோவி லில் வசந்தகுமார் எம்.பி. அலுவலகத்தில் அவரை சந்தித்து தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும், எனவே போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு வசந்தகுமார் எம்.பி. தரப்பில் சாலை பணிகளை வரும் 16-ந்தேதிக்குள் தொடங்காவிட்டால் திட்டமிட்டபடி 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினரும் உடன் இருந்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக முதல் வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாகவும் வசந்தகுமார் எம்.பி. பின்னர் தெரிவித்தார்.

Tags:    

Similar News