லைஃப்ஸ்டைல்
சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்

Published On 2020-08-08 05:34 GMT   |   Update On 2020-08-08 05:34 GMT
சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
வெங்காயம் - ஒன்று
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.



செய்முறை:


வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறவும்.

சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News