செய்திகள்
எலான் மஸ்க்

பேஸ்புக்கை வாங்கி... எலான் மஸ்க் பற்றி வைரலாகும் தகவல்

Published On 2021-08-10 05:24 GMT   |   Update On 2021-08-10 05:24 GMT
உலகின் முன்னணி சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


'எலான் மஸ்க் பேஸ்புக்கை வாங்கி, அதனை அழிக்க இருக்கிறார்,' எனும் தலைப்புடன் செய்தி குறிப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரல் தகவலுடன் டெஸ்லா மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மற்றும் எலான் மஸ்க் இடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எனினும், எலான் மஸ்க் பேஸ்புக்கை வாங்க இருப்பதாக அறிவித்தது இல்லை. மேலும் பேஸ்புக்கில் தனது அக்கவுண்ட்டை எலான் மஸ்க் ஏற்கனவே அழித்துவிட்டார்.



வைரல் தகவல், 2018 ஆம் ஆண்டு கேலி செய்திகளை வெளியிடும் வலைதளம் ஒன்றில் வெளியான தொகுப்பை மையமாக கொண்டு பரவி வருகிறது. கேலி செய்திகளை வெளியிடும் வலைதளத்தில், 'எலான் மஸ்க் முதலீட்டாளர்களிடம் மனித குலத்திற்கு நன்மை பயக்க சமூக வலைதள நிறுவனத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்தார்,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக பேஸ்புக் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க்-ஐ வன்மையாக கண்டித்த எலான் மஸ்க், 2018 வாக்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அக்கவுண்ட்களையும் பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். அப்போது இந்த நடவடிக்கையை கேலி செய்யும் வகையில் அந்த செய்தி தொகுப்பு வெளியானது. தற்போது சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கேலி செய்தியே வைரல் தகவலாக பகிரப்பட்டு வருகிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News