செய்திகள்
பரிசோதனைக்கான சாம்பிள்கள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியாக உயர்வு

Published On 2020-11-09 05:15 GMT   |   Update On 2020-11-09 05:15 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 8.35 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 லட்சமாக உயர்ந்துள்ளது. 79.17 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.56 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 11.85 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 11,85,72,192 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 8,35,401 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News