ஆன்மிகம்
ஐயப்ப பக்தர்கள்

ஆன்லைன் பதிவு கிடைக்காததால் சபரிமலைக்கு செல்ல முடியாமல் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

Published On 2020-12-24 08:21 GMT   |   Update On 2020-12-24 08:21 GMT
சபரிமலைக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சபரிமலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆன்லைன் முன்பதிவு பெற்ற பின்னரே ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் விரைவில் முன்பதிவு முடிந்து விடுகின்றது.

இதனால் சபரிமலைக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர். இதுமட்டுமின்றி 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் எல்லாம் முடித்து விட்டு தான் செல்ல முடியும் என்பதால் மேலும் மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
Tags:    

Similar News