செய்திகள்
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகளை வீட்டிற்கு கொண்டு போன செவிலியர் சஸ்பெண்ட்

Published On 2021-07-26 12:11 GMT   |   Update On 2021-07-26 12:11 GMT
வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் அங்கு சென்று, செவிலியரிடம் இருந்த மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொரோனோ தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் நிலையில், கொரோனோ தடுப்பூசி மருந்துகளை செவிலியர் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால், அந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த அய்யனார் நகரை சேர்ந்த 59 வயது தனலெட்சுமி, கரூர் நகராட்சியில் உள்ள தாய் சேய் நல விடுதியில் செவிலியராக உள்ளார். அவர், கரூர் மருத்துவமனையில் இருந்து சுமார், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று மக்களுக்கு செலுத்தியுள்ளார்.

தகவலறிந்த வேடசந்தூர் வட்டார மருத்துவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் அங்கு சென்று, செவிலியரிடம் இருந்த மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர். செவிலியர் தனலட்சுமியை பணியிடை நீக்கம் செய்த நிலையில், புகாரின் பேரில், போலீசாரின் குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News