செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள் விடுமுறை எடுக்க புதிய நடைமுறை அறிவிப்பு

Published On 2021-07-21 09:56 GMT   |   Update On 2021-07-21 09:56 GMT
அனைத்து விடுப்பு விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட பிரிவின் உதவியாளர் உரிய பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ அலுவலர், அனைத்து பணியாளருக்கு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் அனுப்பிய சுற்றறிக்கையில், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து நிலை மருத்துவ அலுவலர் மற்றும் அனைத்து நிலை பிற பணியாளர்களும் தங்கள் சிறுவிடுப்பு, ஈடுசெய்விடுப்பு உள்ளிட்ட அனைத்து விடுப்புகளையும் உரிய பொறுப்பு அலுவலர் மூலம் டீனிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்று விடுப்பு எடுக்க வேண்டும்.

அனைத்து விடுப்பு விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட பிரிவின் உதவியாளர் உரிய பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி பணியாளர்கள் கூறுகையில்:

தாலுகா மருத்துவமனையாக இருந்து தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்து தற்போது மருத்துவ கல்லூரியாகியுள்ளது. 25 ஆண்டுகளாக இல்லாத புதிய நடைமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு கண்காணிப்பாள ரிடம் ஒப்புதல் பெற்று விடுப்பு எடுப்பது தான் வழக்கம். ஒவ்வொரு பணியாளரும், ஊழியரும் டீனை சந்தித்து விடுப்பு பெறுவது சாத்தியமே இல்லை. இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றனர்.

டீன் முருகேசன் கூறுகையில், மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் அனைவருக்கும் விடுப்பு கொடுக்கும் அதிகாரம் டீனிடம் மட்டுமே உள்ளது. டீனிடம் கேட்காமல், யாருக்கும் விடுப்பு கிடைக்காது. யார் விடுப்பில் உள்ளார். யார் பணியாற்றுகின்றனர் என்பது தெரியவேண்டும். இதனால் தகவல் தெரிவிக்கும்படி  கூறியிருக்கிறேன் என்றார்.
Tags:    

Similar News